தெலுங்கு திரையுலகில் ஆரம்பித்த நடிகை ரஞ்சிதாவின் சினிமா பயணம், தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் ஹிட் அடித்தது. வாத்து மேய்க்குற பெண்ணாக தமிழ் திரையுலகிற்கு ரஞ்சிதாவை அறிமுகப்படுத்தியிருப்பார் பாரதிராஜா. பின்நாளில், அவர் மளமளவென வளர்ந்து, காதல், வீரம், ரொமான்ஸ், கிளாமர் என அனைத்திலும் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
‘மணியே மணிக்குயிலே’ன்னு ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வந்த ரஞ்சிதா ‘கண்ணா என் சேலைக்குள்ள கட்டெரும்பு புகுந்துடுச்சு’ பாடல் மூலம் ரசிகர்களை கிரங்கடிச்சாங்க. இதையடுத்து, ராணுவ வீரரை காதலித்து திருமணம் செய்து குழந்தைகள் என குடும்ப பெண்ணாக மாறினார் ரஞ்சிதா. இதையடுத்து, சினிமாவில் திரும்ப என்ட்ரி கொடுத்த ரஞ்சிதா, வில்லு மற்றும் ராவணன் படத்தில் பிரபுவின் மனைவியாக நடித்திருப்பார்.
இப்படி இருந்த இவரது வாழ்க்கை நித்தியானந்தாவுடனான தனிமையில் இருந்த வீடியோ வெளியானதையடுத்து ஒரே இரவில் முழுவதுமாக மாறியது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் இருப்பது நான் அல்ல என அவர் பலமுறை மறுப்பு தெரிவித்தும், சமீபத்தில் மீடியாக்களிடம் சண்டையிட்டார். இதையடுத்து, குடும்ப உறவுகள் அனைத்தும் விட்டுப் போனது. அவருக்கு நம்பிக்கைக்கு உரியவராக இருந்த கணவரும் விட்டு விலகி விட்டார்.
இந்நிலையில், அவர் அளித்திருந்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், மீடியாக்கள் எல்லாம் சேர்ந்து என் மரியாதையை பொதுவளியில் துகில் உரித்து விட்டார்கள். நான் பெரிய பணக்கார வீட்டு பெண் இல்லை. என் அப்பா பிசினஸ் மேனும் இல்லை. ஒரு சாதாரண மிடில் கிளாஸ் பெண்ணா என்னால, இந்த சம்பவத்தில் இருந்து வெளியோ வர முடியவில்லை. இதுதொடர்பா நடந்த வழக்கில் இருந்தும் என்னை காப்பாற்ற என் அப்பாவால் முடியவில்லை.
இந்த பிரச்சனையை எல்லாம் நினைத்து நினைத்து, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்திற்கு எல்லாம் சென்றேன். பின் என்னை விட்டால் என் குடும்பத்தை பாதுகாக்க ஆள் இல்லை என நினைத்து சமாதானமாவேன். நான் நடிகையாக இருந்த சமயத்தில் வந்த கிசுகிசு எல்லாம் சூட்டிங் இல்லாத சமயத்தில் நான் புத்தகமும் கையுமாக இருப்பேன் என்பது தான். ஆனால், இப்போது அந்த புத்தகங்கள் தான் என்னை அமைதியாக்கி பக்குவப்படுத்தியது.
அந்த கசப்பான அனுபவம் தந்த வலி என்னை விட்டு போகும் முன் என் கணவர் என்னை விட்டு விலகிவிட்டார். எனக்கு நடந்த விஷயங்கள் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் இளமை காலத்தில் இருந்தே கடவுள், ஆன்மீகம் மீது அதிகம் பற்று வைத்துள்ளவள் நான். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன். என்னைப் பற்றி எத்தனயோ விமர்சனங்கள் எழுந்திருக்கலாம். ஆனால், நான் இன்றும் நித்யானந்தாவின் பக்தைதான். இப்போதும் அவருடன் தான் இருக்கிறேன். இனியும் அவருடன் தான் இருப்பேன். ஆன்மீக வழியில் செயல்படுவேன் என்று கூறியுள்ளார்.