கள்ளக்காதலிக்காக கர்ப்பிணி மனைவியை கணவன் கால்வாயில் தள்ளி கொலைசெய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலந்த்சாகர் மாவட்டம், ககோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹசன்பூர் பக்சவா கிராமத்தை சேர்ந்தவர் விஷால். இவரது மனைவி ஹிமான்ஷி. தம்பதிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றநிலையில், ஹிமான்ஷி தற்போது, கர்ப்பமாக இருந்துள்ளார். மேலும், விஷால் திருமணத்திற்கு முன்பே ஹேமா என்ற பெண்ணுடன் காதலில் இருந்துள்ளார். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் விஷாலுக்கு ஹிமான்ஷை திருமணம் செய்துவைத்துள்ளார். ஆனால், திருமணத்திற்கு பிறகும் விஷால் – ஹேமா காதலை தொடர்ந்து அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இவர்களுக்கு உறவுக்கு தடையாக இருந்த மனைவி ஹிமான்ஷியை கொலை செய்துவிடுமாறு விஷாலிடம் கூறியுள்ளார். அதன்படி, கர்ப்பிணியாக இருந்த ஹிமான்ஷியை இரவு நேரத்தில் வாக்கிங் செல்லலாம் என்று கூறி அழைத்து சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்துவிட்டு, வீட்டிற்கு வந்து நாடகமாடியுள்ளார். இதையடுத்து மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி உரிய விசாரணை நடத்தவேண்டும் என்று ஹிமான்ஷியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். அப்போது, விஷாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். விஷாலிடம் தீவிர விசாரணையை மேற்கொண்ட போலீசார், கர்ப்பிணி மனைவியை விஷால் கொலை செய்ததும், கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, கள்ளக்காதலி ஹேமா, தனது நண்பர் பர்தீனின் ஆகியோரின் உதவியுடன் கொலை திட்டத்தை செயல்படுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து விஷால், ஹேமா, பர்தீனின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.