தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சில கடைகளில் அவை விற்றது போக, மீதி பொருட்கள் கையிருப்பில் உள்ளன. ஆனால், அந்த பொருட்களை திருப்பி அனுப்பக்கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க வருவோரிடம் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி, மளிகைப் பொருட்களை விற்பதாகவும் இதனால், பல இடங்களில் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுதாரர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே, மளிகை பொருட்களை வழங்க வேண்டும். கட்டாயப்படுத்தி அவர்களிடம் விற்கக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரேஷனில் வழங்கப்படும் மளிகை பொருட்களை வாங்குவதும், வாங்காததும் அட்டைதாரர்களின் விருப்பமாகும். தீபாவளிக்கு அனுப்பப்பட்ட சிறப்பு மளிகை தொகுப்புகளில் விற்பனையாகாமல் இருப்பதை திருப்பியனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைக்கு வருவோரிடம் மளிகைப் பொருட்களை கட்டாயப்படுத்தி விற்கக்கூடாது என்றும், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ரேஷன் கடைகளில் நோட்டீஸ் ஒட்டுமாறும் மண்டல இணை பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
Read More :
பாஜக வெற்றி எதிரொலி..!! தமிழ்நாட்டிலும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கம்..?
ஸ்பெஷல் கிளாஸ் வைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டல்!. எடப்பாடி அருகே அதிர்ச்சி சம்பவம்..!!