பிரசவத்துக்கு பிறகு இளம் தாய்மார்களின் உடல் எடை அதிகரிக்க கூடும். கொஞ்சம் கவனமெடுத்தால் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை எளிதாக கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். கர்ப்பகாலத்தில் குழந்தைக்கு போஷாக்கான உணவு தேவை என்பதால் எடுத்துகொள்ளும் அதிகப்படியான உணவுகள் கர்ப்பகாலத்தில் அதிக எடையை உண்டாக்குகிறது. ஆனால் பிரசவத்துக்கு பிறகும் எடை கூட வாய்ப்புண்டு என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

அதற்கு காரணமாக உடல் சோர்வு, மனசோர்வு குழந்தையை கவனித்துக்கொள்ளும் கூடுதல் பொறுப்பு போன்றவையே காரணமாக சொல்லப்படுகிறது. இவை தவிர பிரசவக்காலத்துக்கு பிறகு முழு நேரமும் ஓய்வில் இருப்பதாலும் கூட சமயத்தில் எடை அதிகரித்துவிடுகிறது.

பிரசவ காலங்களில் குழந்தைகளின் உடல்நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சத்தான மற்றும் புரோட்டீன்கள் அடங்கிய உணவுகளை கர்ப்பிணிகள் எடுத்து கொள்ள பரிந்துரைக்கப்படுவர். இதனால், பிரசவ காலத்தில், சாதரணமாகவே, கர்ப்பிணிகளின் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். ஒரு சிலர் 10-15 கிலோ வரையிலும், மேலும் சிலர் 20-25 கிலோ வரையிலும் உடல் எடை கூடுவர்.

எப்படி குழந்தை வயிற்றில் இருக்கும்போது உடல்நலன் முக்கியமானதோ, அதேபோல் குழந்தை பிறப்பிக்கு பிறகும் தாய்மார்களுக்கு அதிகளவு உடல்நலம் என்பது முக்கியமானது. ஆகவேதான் ஒரு சில ஆலோசனைகளும் அறிவுரைகளும் தாய்மார்களுக்கு வழங்கப்படுகிறது. கூடிய உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் அதற்கு ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஜங்க் உணவுகளை உட்கொள்ள கூடாது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், சத்தான உணவுகளை உண்பது அவசியம். ஆகவே, உடல் எடை கூடிவிட்டதே என்பதற்காக டயட், ஃபாஸ்டிங் போன்றவை கடைபிடிப்பதை தவிர்க்க வேண்டும். ஃபாஸ்டிங் மூலம் எடையை குறைப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஹெல்த்தியான பாஸ்டிங் மூலமாக எடையை குறைக்கலாம். ஆகவே, நிச்சயம் சாப்பிட வேண்டும். அதுவும் ஆரோக்கியமான முறையில் சாப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு பாலூட்டுவதால் ஆரோக்கியமான உடல்நிலையை பேண வேண்டும். ஆகவே, அதிகளவு புரோட்டீன்கள் அடங்கிய உணவுப்பொருட்களை எடுத்து கொள்ள வேண்டும். சுண்டல், முளைக்கட்டிய பயிறு, முட்டை, மீன், பன்னீர், பால் ஆகியவற்றை சாப்பிடலாம். அசைவ உணவு உண்பவர்கள் மீன் போன்ற உணவுகளை அதிகளவு எடுத்து கொள்ளலாம். இது தாய் பால் நன்றாக சுரப்பதற்கும், உடலில் புரோட்டீன்களின் அளவையும் அதிகரிப்பதோடு உடல் எடை கூடாமலும் இருக்க உதவுகிறது.

சத்து மாவு கஞ்சி, வெஜ் சூப் போன்றவற்றை எடுத்து கொள்ள வேண்டும். மதியம் 11 அளவில் லேசாக உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். உதரணமாக ஜூஸ் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம். மதிய நேரத்தில் புரோட்டீன்கள் அதிகளவு இருக்கும் பருப்பு கீரை சேர்த்து வாரத்தில் 3 நாட்கள் சாப்பிடலாம், காய்கறிகள் அதிகளவும் சாதம் கம்மியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மாலை நேரம் சுண்டல், முளைக்கட்டிய பயிர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். வறுத்த, எண்ணெய்யில் பொறித்த உணவுகளை உட்கொள்ள கூடாது,ஒரே இடத்தில் உட்கார கூடாது. முதல் இரண்டு மாதங்களுக்கு எண்ணெய், காரம் போன்ற உணவுகளை அதிகம் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்கலாம்.

தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தொப்பை , உடல் எடையை குறைக்க மருத்துவமனையிலேயே உடற்பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படும். ஆகவே மருத்துவ ஆலோசனைகளின் படி உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம். இதற்காக குறைந்தது அரைமணி நேரமாவது ஒதுக்க வேண்டும்.

பொறுப்பு துறப்பு : இங்கே கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ தகவல்கள், வீட்டு வைத்தியங்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த தகவல்களுக்கு Idp7News பொறுப்பேற்காது.

Readmore: என்னது 2026 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா?. பதறியடித்து அறிக்கை வெளியிட்ட புஸ்ஸி ஆனந்த்..!!