சேலத்தில் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தன் பெற்றோரை அழைத்துவர கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனுஷ்(21). டீ மாஸ்டராக வேலை செய்து வரும் இவர், பழனியில் வேலை செய்துவந்தபோது, காவியா என்பவரை காதலித்து கல்யாணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு தனுஷ் தனது மனைவியுடன் சேலத்தில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கும் காவ்யாவின் பெற்றோர் சேலத்தில் உள்ள மகளின் வீட்டிற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது வளைகாப்பிற்கு வர வேண்டும் என்று காவ்யா கூறியிருக்கிறார். அதன்படி வளைகாப்பிற்கு வருவதாக பெற்றோரும் காவ்யாவிற்கு உறுதி அளித்துள்ளனர்.

இதையடுத்து வளைகாப்பு நிகழ்ச்சிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரவு பழனியில் இருந்து சேலம் வந்த பெற்றோரை அழைத்துவர தனுஷிடம் கூறியுள்ளார். முதன்முதலாக பெற்றோர் வருவதால், தனுஷுடன் சேலம் புதிய பேருந்து நிலையத்திற்கு காவியாவும் சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணி அளவில் சாரதா கல்லூரி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இறங்கும் இடத்தில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் இருந்து காவியா திடீரென கீழே தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தனுஷ், உடனடியாக காவியாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த காவியா நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Readmore: இந்த அறிகுறிகள் தெரிந்தால் அலட்சியம் வேண்டாம்!. சிறுநீரக கற்கள் உருவாகும் நிலை!. தடுக்கும் வழிமுறை!. மருத்துவர்கள் விளக்கம்!.