மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய், சமையல்காரர், உதவியாளருக்கு கோடிக்கணக்கில் சொத்துக்களை எழுதி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபர் ரத்தன் டாடா சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. ரத்தன் டாடா எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார். வளர்ப்பு நாய்கள் என்றால் அவருக்கு உயிராகும். அவர் தனது வீட்டில் ஜெர்மன் வகையை சேர்ந்த டிட்டோ என்ற ஒரு நாயை ஆசையாக வளர்த்து வந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனது வளர்ப்பு நாய்க்கு சொத்து எழுதி வைத்துவிட்டு சென்று இருக்கிறார்.

மேற்கத்திய நாடுகளில் நாய்களுக்கு சொத்துகளை எழுதி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்தியாவில் மிகவும் அபூர்வமாகத்தான் அது போன்று சொத்து எழுதி வைப்பது வழக்கம். ரத்தன் டாடா எழுதி வைத்துள்ள உயிலில் தன்னுடன் கடைசி வரை இருந்த அனைவருக்கும் சொத்து எழுதி இருக்கிறார்.

டிட்டோ வளர்ப்பு நாயை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தத்து எடுத்துக்கொண்டார். ரத்தன் டாடாவிடம் அதே பெயரில் வேறு ஒரு நாய் இருந்தது. அந்த நாய் இறந்ததை தொடர்ந்து புதிதாக தத்து எடுத்த நாயிக்கு அதே பெயர் சூட்டி வளர்த்து வந்தார். இந்த டிட்டோவை வாழ்நாள் முழுவதும் பராமரிக்க உயிலில் சொத்து எழுதி இருக்கிறார்.

இது தவிர ரத்தன் டாடாவிற்கு கடைசி வரை சமையல்காரராக இருந்த ராஜன் ஷா மற்றும் ரத்தன் டாடாவிற்கு சேவை செய்து வந்த சுப்பையா ஆகியோருக்கும் தனது உயிலில் சொத்து எழுதி வைத்திருக்கிறார். சுப்பையாவிற்கும், ரத்தன் டாடாவிற்கும் இடையே 30 ஆண்டு பந்தம் இருந்தது. ரத்தன் டாடா வெளிநாடுகளுக்கு சென்றால் சுப்பையாவிற்கு உடைகள் வாங்கி வந்து கொடுப்பது வழக்கம்.

இது தவிர ரத்தன் டாடாவின் உதவியாளர் சாந்தனுவிற்கும் உயிலில் சொத்து எழுதி இருக்கிறார். சாந்தனு வெளிநாட்டில் சென்று படிக்க டாடா நிறுவனம் கடன் கொடுத்தது. அக்கடனை ரத்தன் டாடா தள்ளுபடி செய்தார். அதோடு சாந்தனுவின் ஸ்டார்ட் ஆப் நிறுவனத்திலும் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார்.

ரத்தன் டாடா கொலாபாவில் வசித்து வந்த வீடு மட்டும் 10 ஆயிரம் கோடி மதிப்புடையது ஆகும். இது தவிர மும்பை ஜுகுதாரா சாலையில் இரண்டு மாடிகள் கொண்ட வீடு, கடற்கரை நகரமான அலிபாக்கில் 2000 சதுர அடி கொண்ட கடற்கரையோர பங்களா, 350 கோடி வங்கி டெபாசிட்கள் மற்றும் டாடா சன்சில் 0.83 சதவீத பங்குகள் என ரத்தன் டாடா பெயரில் சொத்துக்கள் இருக்கிறது. ஜுகுவில் இருக்கும் வீடு 20 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருக்கிறது. அந்த சொத்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.

இந்த சொத்துக்கள் அனைத்தும் 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரத்தன் டாடா எண்டோமெண்ட் பவுண்டேசனுக்கு மாற்றப்படும். டாடா நிறுவனங்களில் ரத்தன் டாடா பெயரில் இருக்கும் பங்குகள் அனைத்தும் புதிய டிரஸ்டிற்கு மாற்றப்படும். ரத்தன் டாடா பல ஸ்டார்ட் ஆப் நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தார். அவை அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு பவுண்டேசனுக்கு மாற்றப்பட்டு சேவைகளுக்கு பயன்படுத்தப்படும். ரத்தன் டாடா வசித்து வந்த வீட்டில் அவர் பயன்படுத்திய 30க்கும் மேற்பட்ட ஆடம்பர கார்கள் இருக்கிறது.

அந்த கார்களை என்ன செய்யலாம் என்பது குறித்து டாடா குடும்பம் பரிசீலித்து வருகிறது. அவற்றை டாடா குரூப் வாங்கி புனே மியூசியத்தில் வைக்கும். அல்லது அவற்றை ஏலம் விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தன் டாடா தனது வாழ்நாளில் பெற்ற விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எதிர்கால தலைமுறைக்காக பாதுகாக்கப்படும் என்று டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது.

100 பில்லியன் டாலர் கொண்ட டாடா குரூப் நிறுவனங்களின் தலைவராக ரத்தன் டாடா இருந்த போதிலும் தனக்கென தனிப்பட்ட முறையில் சொத்துகளை பெரிய அளவில் வைத்துக்கொண்டதில்லை. எனவேதான் ரத்தன் டாடா பெயர் ஒருபோதும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் வந்ததில்லை. எப்போதும் தொண்டு மற்றும் நன்கொடை வழங்குவதில் ஆர்வம் கொண்ட ரத்தன் டாடாவின் சொத்துகள் அனைத்தும் இனி சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: சேலத்தில் சித்தப்பாவை பார்க்க சென்ற பெண்ணுக்கு சரமாரி அடிஉதை!. அண்ணனின் வெறிச்செயலால் அதிர்ச்சி!.