தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டியிடுவார் என மாவட்ட தலைவர் சிவா அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் அண்மையில் மிகப்பெரிய அளவில் மாநாட்டை நடத்திக் காட்டி இருந்தார். தொடர்ந்து 26 தீர்மானங்களையும் தமிழக வெற்றிக் கழகம் நிறைவேற்றி இருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திட்டங்களை நடிகர் விஜய் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் தற்போது கட்சிக்கு ஆள் சேர்ப்பது மற்றும் நிர்வாகிகள் நியமனம் ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தர்மபுரியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட தலைவர் தா.ப.சிவா பேசுகையில், ”2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சியின் தலைவர் விஜய் தர்மபுரியில் உள்ள ஐந்து தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இந்த மண் அதியமான் பிறந்த மண். அவ்வையார் வாழ்ந்த மண். எங்கள் தொகுதியில் நீங்கள் நின்று சிஎம் ஆக வேண்டும் என கோரிக்கை வைத்தோம். தர்மபுரியில் தான் போட்டியிடுவேன் என்று விஜய் சொல்லி 10 நாள் ஆகிறது. ஆனால் இன்று தான் அதை வெளியிடுகிறேன்” என பேசி உள்ளார். தர்மபுரி மாவட்ட தவெக தலைவரின் பேச்சு காரணமாக விஜய் தர்மபுரியில் உள்ள 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Readmore: திடீர் டுவிஸ்ட்!. அதிமுகவுடன் திருமா கூட்டணியா?. அடையாளம் தாண்டி சிந்திப்போம் என பேச்சு!.