நடிகை சமந்தா மீது தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமராவ் விருப்பம் கொண்டார். அவரது ஆசைக்கு இணங்குமாறு நாகார்ஜுனாவின் குடும்பமே சமந்தாவை வற்புறுத்தியது. நாகர்ஜுனா குடும்பத்தின் செயல்களை ஏற்காத சமந்தா, நாக சைதன்யாவை பிரிந்து விட்டார். இந்த ஜோடியின் பிரிவுக்கு, தெலங்கானா முன்னாள் முதலமைச்சரின் மகனும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராமாராவ்தான் காரணம்” என தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா குறிப்பிட்டிருந்தார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும் சமந்தாவின் பதிவில், திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தொடர்ச்சியான எதிர்ப்புகள் எழுந்திருக்கும் நிலையில் வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் எழுதியிருக்கும் பதிவில், ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதை கேள்வி கேட்பதாகவே இருந்தது. உங்களை காயப்படுத்துவதற்காக நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய கருத்தால் நீங்களும் உங்கள் ரசிகர்களும் புண்பட்டிருந்தால் எந்த நிபந்தனையுமின்றி வாபஸ் பெறுகிறேன், வேறு எதுவும் நினைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
Readmore: வீடு, மனை வாங்குவோர் கவனத்திற்கு!. புதிய இணைய வசதி!. தமிழக அரசின் அசத்தல் ஏற்பாடு!