விஜய்யின் GOAT திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. இதில், மறைந்த நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் தோன்றுவது போன்ற காட்சிகள் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் இடம்பெற்றிருக்கின்றன. இது குறித்துப் பேசியுள்ளார் விஜயகாந்த்தின் மனைவியும், தேசிய முற்போக்கு திராவிடக் கழக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்.

“ஏ.ஐ-யில் கேப்டன் வந்ததற்கு நன்றி சொல்ல என்னைச் சந்தித்தார்கள். நான் வாழ்த்தினேன். எங்களுக்கு ஸ்பெஷல் ஷோ காண்பிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். கேப்டன் அவர்கள் வரும் காட்சிகள் நிச்சயம் சிறப்பாக இருக்கும். நான் நிச்சயம் இந்த திரைப்படத்தைப் பார்ப்பேன்.” என்றார், பிரேமலதா.

விஜய்யின் அரசியல் மாநாடு பற்றி கேட்டபோது, “விஜய் மாநாடு நடத்த அனுமதி கொடுத்தால் இந்த அரசாங்கத்துக்கு என்ன பிரச்னை? கட்சி தொடங்கவும், மாநாடு நடத்தவும் எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. யாரும் யாருடைய வளர்ச்சியையும் தடுத்து நிறுத்த முடியாது. உரிய முறையில் அனுமதி கேட்டால் கொடுக்க வேண்டியது அரசின் கடமை.” எனப் பதிலளித்தார்.

விஜய்க்கு ஆதரவாக பிரேமலதா பேசவே, அரசியலில் கூட்டணி இருக்குமா எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “விஜய் இப்போதுதான் கட்சி ஆரம்பித்திருக்கிறார். மாநாடு நடத்தட்டும், கொள்கைகளைத் தெரிவிக்கட்டும், அதன் பிறகுதான் நாங்கள் முடிவு செய்ய முடியும்.” எனப் பதிலளித்தார்.

Readmore: விவசாயிகளே!. உங்க அக்கவுண்டில் ரூ.2000!. 18-வது தவணையில் உங்கள் பெயர் இல்லையா?. என்ன செய்ய வேண்டும்?