உத்தர பிரதேசத்தில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து பெண் வேடத்தில் சுற்றித்திரிந்த காதலனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள், அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத் பகுதியில் காதலியை பார்ப்பதற்காக புர்கா அணிந்து சந்த் புரா என்ற இளைஞர் சென்றுள்ளார். காதலியின் வீடு அருகே சுற்றித்திரிந்த அவரை அக்கம்பக்கத்தினர் சந்தேக நோக்கத்தில் கூப்பிட்டு விசாரித்தனர். அப்போது புர்காவை அகற்றும்படியும், ஆதார் அட்டையை காண்பிக்குமாறும் சந்த் புராவிடம் பொதுமக்கள் கேட்டுள்ளனர். புர்காவை அகற்றியதும், அவர் ஆண் எனத் தெரிந்ததால் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அவரை முழுமையாக சோதனை செய்ததில், அவர் சிறிய ரக துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். சந்த்தை அடித்து துவைத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் காதலியை பார்க்கவே புர்கா அணிந்து வந்ததாக கூறியுள்ளார். இருந்தாலும், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Readmore: வங்கியில் லாக்கர் வைத்துள்ளீர்களா?. புதிய ரூல்ஸ் வந்தாச்சு!. எப்படி தேர்வு செய்வது? தகுதி, செலவு குறித்த முழுவிவரங்கள்!.