கருவை கலைக்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிகொண்டு ஏமாற்றிய காதலியை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சமயபுரம் பைபாஸ் ரோட்டில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், முட்புதரில் கிடந்த 40 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பிரே பரிசோதனை அறிக்கையில் அந்த பெண் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்து. இதையடுத்து விசாரணை எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்காக பல்வேறு மாவட்ட போலீசாரின் உதவியை நாடிய சமயபுரம் போலீசாருக்கு, இறுதியில் சந்தேகத்திற்கிடமான முறை திருப்பூர் பேருந்து நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சேலம் மாவட்டம் தலைவாசலை சேர்ந்த விக்னேஷ் என்பது தெரியவந்தது.

அவரிடம் விசாரணை செய்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. கொத்தனார் வேலைபார்க்கும் விக்னேஷ், ஸ்ரீரங்கம் பகுதிக்கு பணிக்காக சென்றநிலையில் அந்த பெண்ணுடன் பழகியுள்ளார். கணவரை பிரிந்த அந்த பெண், யாசகம் வாங்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறி அடிக்கடி தனிமையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமடைந்தாக கூறி, அந்த பெண் விக்னேஷிடம் கருவை கலைக்கவேண்டும் என்று கூறி ரூ. 13 ஆயிரம் பணம் வாங்கி கொண்டு அவரிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

சம்பவத்தன்று தனியாக அழைத்து பேச விக்னேஷ் அந்த பெண்ணை வரவழைத்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது, அப்போது உண்மையாகவே கர்ப்பமாக இருக்கியா என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், ஆத்திரத்தில் விக்னேஷ், பெண்ணின் சேலையால் அவரது கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, உடலை வீசிவிட்டு சென்றது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி விக்னேஷை திருச்சி ஜெயிலில் அடைத்தனர்.

Readmore: ஆசிரியர்களே உஷார்..! இனி மாணவிகளுக்கு எதிராக பாலியல் தொல்லையில் ஈடுபட்டால்..!! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை..!!