கஞ்சா விற்பனை செய்து காதலியுடன் ஊர் சுற்றிவந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கூறிய காரணங்களை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் சமீக நாட்களாக போதைப் பழக்கம் அதிகமாகி வருகிறது. அந்தவகையில் நீலகிரி மாவட்டத்திலும் இந்த பழக்கம் இருந்து வருகிறது. அதாவது, இந்த பழக்கத்திற்காகவே, சுற்றுலா பயணிகள் அதிகளவில் இங்கு வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் ரோந்து பணியின்போது, 21 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சிக்கினார்.
அவரிடம் சோதனை செய்ததில் பாக்கெட் மற்றும் பைக்கில் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசாரிடம் இளைஞர் கூறிய தகவல் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஊட்டியை சேர்ந்த அந்த கல்லூரி மாணவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். அவருக்கு மது , புகை போன்ற பழக்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் இளம்பெண் ஒருவரையும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. வீட்டில் பெற்றோர்கள் கொடுக்கும் பணம் தனது செலவை போக்கவே சரியாக இருப்பதாகவும், காதலிக்கு செலவு பண்ண போதவில்லை என்று கூறியுள்ளார். இந்தநிலையில்தான், அவருடன் படிக்கும் கல்லூரி மாணவர்கள் பணத்துக்காக கஞ்சா விற்பனை செய்து வருவது இளைஞருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்களுடன் சேர்ந்த கஞ்சா விற்பனை செய்து ஒரு நாளைக்கு 1000 ரூபாய் என மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதித்து வந்துள்ளார். அந்த பணத்தில் தனது காதலிக்கு புத்தாடைகள், செல்போன் வாங்கி கொடுப்பது வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்வது என எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார்.இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞரை, கல்லூரி மாணவர் என்பதால் ஜாமீனில் விடுவித்தனர்.