நாட்டின் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் இரவு நேரங்களில் அதிக கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பானிபூரி விற்பனை செய்யும் வாலிபர் ஒருவர் 99 ஆயிரம் ரூபாய்க்கு, வாழ்நாள் முழுவதும் பானிபூரி வழங்குவதாக கூறியது, இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. 99 ஆயிரம் ரூபாய் செலுத்தி விட்டால், ஆயுட்காலம் முழுவதும் பானிபூரி எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதே அவர் அறிவித்துள்ள சலுகைத் திட்டமாகும். அதேபோல், ஒரே நேரத்தில் 151 பானி பூரிகளை சாப்பிடும் நபருக்கு ரூ.21 ஆயிரம் பரிசளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பானிபூரி வியாபாரி கூறியதாவது எங்களிடம் ரூ.1 முதல் ரூ.99 ஆயிரம் வரை பல்வேறு விதமான ஆபர்கள் உள்ளன. மேலும், இரண்டு பேர் ஏற்கனவே ரூ.99 ஆயிரம் செலுத்தி வாழ்நாள் சலுகைத் திட்டத்தை பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் எனது வாடிக்கையாளர்களை பணவீக்கத்தில் இருந்து பாதுகாக்க இந்த சலுகையை வழங்கியதாக தெரிவித்தார். இது குறித்து வாடிக்கையாளர்களிடம் கேட்டபோது வாடிக்கையாளர் கூறுகையில், ரூ.195க்கு ஒரு மாதத்திற்கு லைப்டைம் பானி பூரி சலுகை இருப்பதாகவும் உணவு சுவையாக இருக்கிறது’ என தெரிவித்தார்.

Read More: கள்ளக்காதலுக்கு இடையூறு!. மீன்குழம்பில் விஷத்தை கலந்து தீர்த்துக்கட்டிய மனைவி!. துடிதுடித்து பலியான கணவன்!.