நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்துச் செய்வதாகவும், இருவரும் பிரிந்து வாழப் போவதாகவும் சமீபத்தில் ஆதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், ஆர்த்தி, “எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையைப் பார்த்து நான் கவலையும், மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்” என்று பதிலடி கொடுத்திருந்தார்.

இதையடுத்து, ஜெயம் ரவி தன் மனைவியைப் பிரிந்ததற்குப் பாடகி ஒருவர்தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் வைரலானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “தவறானத் தகவல்களைப் பரப்புகிறார்கள். இதில் யாரையும் இழுக்க வேண்டாம். ‘வாழு, வாழவிடு’. தனிப்பட்ட வாழ்க்கையைத் தனிப்பட்ட வாழ்க்கையாக இருக்க விடுங்கள்” என்று படவிழாவில் கலந்துகொள்ள வந்தபோது பேட்டியளித்தார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தி மீது சென்னை அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. மேலும், ஜெயம் ரவி தனது புகாரில், சென்னை ஈ.சி.ஆர் சாலை ஆர்த்தி வீட்டில் இருக்கும் தனது உடைமைகளை மீட்டுத் தர வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Readmore: சட்டவிரோத ஆக்கிரமிப்பு!. எடப்பாடியில் ரூ.15 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!. இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!