நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல இடங்களை இயக்கியும் நடித்தும் இருக்கிறார். அந்த வகையில், கடந்த 2011ஆம் ஆண்டு சீமான் இயக்கிய வாழ்த்துகள் என்ற படத்தில் நடித்திருந்த விஜயலட்சுமி, சீமானுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டதாகவும், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி வந்தார். மேலும், தான் கர்ப்பமாக இருந்து அதை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை கிளப்பினார்.

இவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஒருகட்டத்தில் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு, பெங்களூருவுக்கு விஜயலட்சுமி சென்றுவிட்டார். அடிக்கடி சீமானை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர், தற்போதும் ஒரு வீடியோவை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “சீமான் அவர்களே.. நான் தமிழ் பொண்ணே இல்லைன்னு உங்க கட்சிக்காரங்க சொன்னாங்களே ஏன் உங்களுக்கு அது தெரியாதா? தெரிஞ்சும் தெரியாத மாதிரி சும்மாவே இருந்தீங்க. எனக்கு 4 புருஷன்னு சொன்னாங்களே. எனக்கு திருமணமே ஆகலனு உங்களுக்கு தெரியாதா சீமான்..? இப்படி எதுவுமே தெரியாம தான் தமிழ்நாட்டுல கட்சி நடத்திட்டு இருக்கீங்களா..?

போன வருஷம் உங்க மேல புகார் கொடுத்தனே அதுவாச்சும் எதுக்குனுக்கு தெரியுமா சீமான்? நீங்க சொன்ன மாதிரி ரூ.50,000 பணம் கொடுத்திருந்தா இந்த பிரச்சனையே இருக்காது. பெண் பாவம் பொல்லாதது சீமான் அவர்களே.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்னு நினைச்சிட்டு இருக்கீங்களா..? திமுக கிட்ட காசு வாங்கிட்டு இந்த மாதிரிலாம் செஞ்சிருந்தா, எங்க அக்கா இப்படி படுத்த படுக்கையா இருப்பாங்களா..? என சீமானை கடுமையாக விளாசியுள்ளார் விஜயலட்சுமி.

Read More : தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறு இருக்கா..?