தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட போதிலிருந்தே அதன் தலைவர் விஜய்க்கு ஆதரவாகவே நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசி வந்தார். தம்பி தம்பி என்றே அழைத்து வந்தார். இதனால் அவர் விஜய் கட்சியுடன் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.”திராவிடம், தமிழ் தேசியம் ஆகியவை நமது இரண்டு கண்கள்” என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடிகர் விஜய் பேசியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் நாகர்கோவிலில் சீமான் பேசுகையில் விஜய் என்ன பெரிய தலைவரா என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இந்தநிலையில், தற்போது கட்சி பெயரை வைத்து, “திராவிடம் பற்றி பேசும் விஜய், கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் அல்லது அகில உலக வெற்றிக் கழகம் என பெயர் வைத்திருக்கலாமே”, என்று விமர்சித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா, கருணாநிதி இருந்த காலத்திலேயே கட்சியை தொடங்கியவன் நான். ஜெயலலிதா, கருணாநிதியைவிட விஜய் பெரிய தலைவரா? அவர்கள் கூட்டாத கூட்டத்தையா விஜய் கூட்டிவிட்டார். விஜய்யால் எனக்கு வாக்கு வங்கி பாதிக்கும் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன். ஒரே தொகுதியில் நாங்கள் இருவரும் போட்டியிடுகிறோம். ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் யார் வெற்றி பெறுகிறார் என்பதை பார்ப்போம். கூட்டணி கண்டிப்பாக வைக்கக் கூடாது.
நான் தனித்து போட்டியிட்டு ஒன்றரை லட்சம் வாக்குகள் பெற்றுள்ளேன். 2026 ஆம் ஆண்டு தேர்தல் முடிவில் நான் யார் என்பது தெரியும். பொழுதுபோக்கு தளத்தில் தலைவர்கள் தேடியவர்கள் அல்ல, என்னை விரும்பிய மக்கள். என்னை பின் தொடரும் மக்கள் அனைவரும் போராட்ட களத்தில் தலைவரை தேடுபவர்கள். எனது கட்சியில் இருந்து பிற கட்சியில் சேர்ந்தவர்கள் என கூறுவோர், அவர்களிடம் இருக்கும் நாதக கட்சி உறுப்பினர் அட்டையை காட்டச் சொல்லுங்கள்.
உலக அளவில் ரசிகர்களை வைத்துள்ள விஜய், தன் கட்சிக்கு உலக வெற்றிக் கழகம் என பெயர் வைக்காதது ஏன்? கேரளாவில் அதிக ரசிகர்கள் கொண்டிருக்கும் விஜய் அங்கு ஏன் கட்சி ஆரம்பிக்கவில்லை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.