பிறப்புச் சான்றிதழ் மிக அவசியமான ஒரு ஆவணமாகப் பார்க்கப்படுகின்றது. முன்பெல்லாம் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருந்து பெற வேண்டிய சூழ்நிலை இருந்தது ஆனால், தற்போது தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.

பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டம், 1969ன் கீழ் பிறப்புச் சான்றிதழ் இந்தியாவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குழந்தையின் பிறப்பும் 21 நாட்களுக்குள் உள்ளூர் மாநகராட்சி அல்லது நகராட்சியில் பதிவு செய்யப்பட வேண்டும். பிறப்பு சான்றிதழ்கள் ஏன் அவசியமாகின்றன தெரியுமா? குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டுமானால், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க வேண்டுமானால், மத்திய, மாநில அரசுப் பணிகளில் சேர வேண்டுமானால், திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமானால், ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவைகளை பெற வேண்டுமானால், பிறப்பு சான்றிதழ் கட்டாயமாகும்.

அதுமட்டுமல்ல, இந்த பிறப்பு சான்றிதழ் ஒருவரின் அடையாளம் என்பதுடன், அதை வைத்துதான் எதிர்காலம் கணிக்கப்படுகிறது. அதனால் அரசு வேலை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயமாக்கியுள்ளது.. அத்துடன், பிறப்பு சான்றிதழ் பெறுவதையும் அரசு தற்போது எளிதாக்கியிருக்கிறது.
பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு, சில ஆவணங்கள் அவசியம் தேவைப்படும்.. குறிப்பாக, பெற்றோர் குறித்த சில சான்றிதழ்கள், பெற்றோரின் திருமணச் சான்றிதழ், மருத்துவமனையிலிருந்து குழந்தை பிறந்தது குறித்து வழங்கப்பட்ட கடிதத்தின் சான்று, பெற்றோரின் அடையாளச் சான்று போன்றவை பிறப்புச்சான்றிதழ் பெறுவதற்கு தேவையான ஆவணங்களாகும்.

பிறப்பு சான்றிதழ்கள் சிலசமயம் தொலைந்துவிட்டால், மீண்டும் எளிதாக பெறலாம்.. 2018-க்கு முன் பிறந்த குழந்தைக்கான பிறப்பு சான்றிதழ்களை தொலைத்துவிட்டால், நீங்கள் இதற்கு முன்பு பிறப்பு சான்றிதழை எங்கு பதிவு செய்தீர்களோ, அதே அலுவலகத்தில் உள்ள பிறப்பு இறப்பு பதிவாளரிடம் மீண்டும் மனு கொடுத்து விண்ணப்பிக்கலாம். பிறப்புச் சான்றிதழின் நகல் இருந்தால் போதும்.. நகல் இல்லாவிட்டால், குழந்தை பிறந்த தேதி,பிறந்த இடத்தைக்கூறி விண்ணப்பிக்கலாம். ஆனால், ஆன்லைனிலேயே இந்த சான்றிதழின் நகலை பெற்றுக்கொள்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.. எந்தவித செலவும் இல்லாமல், நாமே இதை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

வீட்டிலிருந்தே சில நிமிடங்களில் பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்த வசதியில் சில வேறுபாடு இருக்கலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்காகவே பிரத்யேகமான இணையதளம் இருக்கிறது. பிறப்புச் சான்றிதழ் பெற, தமிழ்நாடு அரசின் https://www.crstn.org/birth_death_tn/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும். அதில் பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்வதற்கான படிவத்தை நிரப்புங்கள். பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோரைப் பற்றிய தகவல்கள், தொலைபேசி எண் போன்ற விவரங்களைச் சரியாகக் குறிப்பிட்டு, படிவத்தை நிரப்பியதும் பிறப்புச் சான்றிதழைப் பார்க்கவும் டவுன்லோட் செய்யவும் முடியும்.

பிறப்புச் சான்றிதழ் டவுன்லோட் செய்ய எந்தக் கட்டணமும் இல்லை. குழந்தை பிறந்து 21 நாளுக்குப் பிறகு பதிவுசெய்யப்படும்போது 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பிறப்புச் சான்றிதழை டவுன்லோட் செய்ய முடியும். ஆனால், ஓராண்டிற்குள் குழந்தையின் பெயரைச் சேர்த்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. ஒரு வருடத்துக்கு மேல் தாமதமானால் ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

Readmore: காணாமல் போனவரின் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா?. இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!