திருப்பூர் அருகே சேமலைக்கவுண்டம் பாளையத்தில், தாய், தந்தை,மகன் என மூன்று பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர் அருகே பொங்கலூர் – சேமலைக் கவுண்டம்பாளையத்தில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அலமாத்தாள் வசித்து வந்தனர். மகன் செந்தில்குமார் கோவையில் வசிக்கிறார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சொந்த ஊர் சென்றவர், நேற்று இரவு பெற்றோருடன் வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் நேற்று (நவ.,29) அடையாளம் தெரியாத நபர்களால் கட்டையால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து அப்பகுதி மக்களுக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தோட்டத்தில் வீடு அமைந்து உள்ளதால் சி.சி.டி.வி., கேமரா ஏதும் இல்லை. இதனால் அருகில் வசிக்கும் விவசாயிகள், கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் இருந்த 8 பவுன் நகை மாயமாகி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி கூறியதாவது,பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை ஒருவர் செய்திருக்க வாய்ப்பு இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட நகை குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். தோட்டத்தில் வேலை பார்த்தவர்களின் பட்டியலை சேகரித்து விசாரணை நடத்தி வருகிறோம். கொலையாளிகளை பிடிக்க வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Readmore: கலவரம் செய்வதே திமுகவினர்தான்!. அதை மறந்துவிடுகிறார் உதயநிதி!. எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!