சேலத்தில் வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற ஆத்திரத்தில் மனைவியை கணவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் பிருந்தா தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்தநிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து, கணவர் மணிகண்டனையும் அவரது பிள்ளைகளையும் விட்டு பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக பிருந்தா நாமக்கல்லில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். அப்போது, நாமக்கல் மோகனூர் சாலையில், பிருந்தா வேறு ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், இருசக்கர வாகனத்தை வழிமறித்து பிருந்தாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியநிலையில், தான் மறைத்து வைத்திருந்த ஸ்க்ரூ டிரைவால் பிருந்தாவை சரமாறியாக தலையில் அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிருந்தா கீழே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் பிருந்தாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். மனைவி வேறு ஒருவருடன் பைக்கில் சென்ற ஆத்திரத்தில் இப்படி நடந்துகொண்டதாக மணிகண்டன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

Readmore: தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு கனமழை ரெட் அலர்ட்!. இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! வானிலை அப்டேட்!