சேலத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் பெற்ற குழந்தைகள் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அசோக் குமார் (40). இவரது மனைவி தவமணி (38). இந்த தம்பதிக்கு வித்யதாரணி (13), அருள்பிரகாஷ் (5), அருள்குமாரி (10) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை அசோக் குமாரின் வீட்டிற்கு அவரது உறவினர்கள் சென்றுள்ளனர்.
அப்போது அங்கு தவமணி மற்றும் 3 குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதில், வித்யதாரணி (13), அருள்பிரகாஷ் (5) ஆகிய இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாய் தவமணி மற்றொரு குழந்தையான அருள்மாரியை உறவினர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விரைந்து வந்து தவமணி மற்றும் குழந்தை அருள்மாரியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையிலான கெங்கவல்லி போலீசார், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள கூலித் தொழிலாளி அசோக்குமாரை தேடி வருகின்றனர். முதற்கட்டமாக நடத்தப்பட்ட விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை அசோக்குமார் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : யூத் என நினைத்து உருகி உருகி சேட்டிங்..! மருத்துவ கல்லூரி மாணவிக்கு காத்திருந்த ட்விஸ்ட்..?