சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவரது மனைவி அம்பிகா (54) இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அம்பிகா வழக்கம்போல் பணிக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.
அம்பிகா தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது அவருடைய வீட்டின் கதவு உடைக்கபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொது பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து, சம்பவம் குறித்து அம்பிகா தலைவாசல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
Read More:அரசு பள்ளியில் +2 மாணவன், தற்கொலை முயற்சி..! தேர்வில் தேர்ச்சி பெற மாட்டேன்’… தோல்வி பயமா..?