கனமழை எதிரொலியாக தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இருப்பினும் சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிவுறுத்தலில், நாளை முதல் வரும் 18ம் தேதி வரை ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: கொட்டித்தீர்க்கும் கனமழை!. ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி அதிகரித்த நீர்வரத்து!. காவிரியில் சீறிப்பாயும் நீர்!