சுதந்திர தினவிழா (Independance Day 2024) ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒட்டுமொத்த இந்தியாவும், உலகளவில் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் அனைவரும் சிறப்பிக்கும் சுதந்திர தினநாளை வெகுவிமர்சையாகவும், பாரம்பரிய முறைப்படி கொண்டாடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. டெல்லி செங்கோட்டையில் மாநில வாரியாக அணிவகுப்பு, முப்படைகளின் கலைநிகழ்ச்சி நடைபெறும். அதேபோல் சென்னையிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடை மற்றும் பார் நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் அதிகாரிகள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை கண்காணித்து, உத்தரவை மீறி செயல்படும் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : உஷார்..!! ஜெராக்ஸ் எடுக்கச் சென்ற பள்ளி மாணவியிடம் சில்மிஷம்..!! கடை உரிமையாளர் மீது பாய்ந்தது போக்சோ சட்டம்..!!