மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தொலைத்தொடர்பு துறை பொதுமக்கள் எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது.

இந்தியாவில் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் (எ.கா., சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்றவை) பொதுப் பாதுகாப்புச் செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரகால எச்சரிக்கைகளை வழங்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” பயன்படுத்தப்படுகிறது. இத்தொழில்நுட்பம் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தொடர்ந்து 2வது நாளாக இன்றும் (அக்.16) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என்று மத்திய, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து எச்சரிக்கை குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளது. பேரிடர்களின் போது பொதுமக்களின் அவசரகால பாதுகாப்பு தகவல்தொடர்புகளை மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் கடந்த வருடம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: மீண்டும் சிக்கல்!. த.வெ.க. மாநாடு தேதி மாற்றம்?. விஜய்க்கு இப்படியொரு சோதனையா?.