* பனையூரில் நாளை காலை 9:15 மணிக்கு தவெக கட்சி கொடி அறிமுகம் செய்யப்படுகிறது. நாளை முதல் நாடெங்கும் கொடி பறக்கும், தமிழ்நாடு இனி சிறக்கும் என விஜய் அறிக்கை.
* கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலில் 15 நாட்களுக்குள் அனைத்து விசாரணையையும் விரைந்து முடிக்க முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு.
* இயக்குனர் நெல்சனின் மனைவி கொடுத்த 75 லட்சம் ரூபாய், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதா..? என காவல்துறையினர் தீவிர விசாரணை.
* சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வேண்டும் என ஆளுநருக்கு உயர்கல்வித்துறை கடிதம்.
* திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது பெண் வழக்கறிஞர் புகார். தங்கலான் படத்தில் வைணவ மதத்தை இழிவுபடுத்தும் காட்சிகளை நீக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு.
* மின் வாரிய கேட்மேன் ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ். காலிப்பணியிடங்களை நிரப்புவதாக உயர்நீதிமன்றத்தில் மின் வாரியம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ்.
* சென்னையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாட்டில் இதுவரை 9.74 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக பெருமிதம்.