இரவு முழுவதும் ஆட்டோ ஓட்டுநருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, பெற்றொருக்கு பயந்து அந்தரங்க உறுப்பில் ஆப்ரேஷனுக்கு பயன்படுத்தப்படும் பிளேடு மற்றும் கற்களை நுழைத்து இளம்பெண் நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் கோரேகானில் உள்ள ராம் மந்திர் ரயில் நிலையம் அருகே இளம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரது அந்தரங்க உறுப்பில் இருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு மற்றும் கற்கள் நுழைக்கப்பட்டிருந்ததை மருத்துவர்கள் அகற்றினர். இதையடுத்து அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். மயக்கம் தெளிந்ததையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனாதையான நான், வாரணாசியில் தனது மாமாவால் வளர்க்கப்பட்டதகாவும், கடந்த 20ம் தேதி மும்பைக்கு வந்ததாகவும், அங்கு வைத்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இவரது பதிலில் சந்தேகமடைந்த போலீசார், மேற்கொண்டு பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல் வெளியானது. பாத்திரம் தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வரும் அந்த பெண், தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த 21ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தொடர்ந்து பணியிடத்திற்கு சென்று அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு சென்றதாகவும், பின்னர் அவர் நலசோபரா நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை சந்தித்து தனது குடும்ப பிரச்சனைகள் குறித்து பேசியுள்ளார். இதற்கு ஆறுதல் கூறி அர்னாலாவுக்கு அழைத்துச் சென்ற அந்த ஆட்டோ ஓட்டுநர், அறைகள் எதும் கிடைக்காததால், பீச்சிலேயே இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்ற பயத்தில் கத்தி மற்றும் கல்லை தானே பிறப்புறுப்பில் நுழைத்துக் கொண்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனரை கைது செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

Readmore: சுக பிரசவத்தில் ஏற்கனவே 9 குழந்தைகள்!. மீண்டும் கர்ப்பம் தரித்த பெண்!. எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் மருத்துவமனையில் அட்ராசிட்டி..!!