சில ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தை முதல் பெரியவர்கள் வரை, கழுத்து, கை, இடுப்பு பகுதியில் கருப்பு கயிற்றில் தாயத்து கட்டியிருப்பார்கள். அந்த நடைமுறை காலப்போக்கில் பழமை, மூடநம்பிக்கை என்ற அடிப்படையில் தூக்கி எறியப்பட்டு விட்டது. மிகவும் சிலரே இப்போது தாயத்து கட்டுகிறார்கள். அதுவும் வெத்து தாயத்துதான். குழந்தை பிறந்ததும், அதன் தாயோடு இணைந்த தொப்புள் கொடி துண்டிக்கப்படும். குழந்தையின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி இருக்கவே செய்யும். அதுவும் காலப்போக்கில் காய்ந்து விழுந்து விடும்.

அந்த காய்ந்த தொப்புள் கொடியைத்தான், தாயத்துக்குள் வைத்து அந்தக் குழந்தைகளின் கழுத்திலோ, கையிலோ, இடுப்பிலோ அந்த காலத்தில் கட்டிவிடுவார்கள். சிலர் தொப்புள் கொடியை காயவைத்து அரைத்து பொடியாக்கியும் தாயத்துக்குள் வைப்பார்கள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவனானதும், ஏதாவது கொடிய நோய் ஏற்பட்டால் அவற்றில் இருந்து காப்பற்ற, தாயத்துக்குள் இருக்கும் தொப்புள் கொடி பவுடரை, நீரில் கரைத்து கொடுப்பார்கள். அதன் மூலம் நோய் அகன்றுவிடும் அதிசயம் நிகழ்ந்தது. அதைத்தான் மூடநம்பிக்கை என்று நாம் ஒதுக்கிவிட்டோம்.

குழந்தைகள் வளர்ந்து அவர்கள் பெரியர்களானதும், கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால், தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயையும் குண்படுத்திவிடலாம் என்கிறது மருத்துவ உலகம். தொப்புள் கொடி அடங்கிய தாயத்தை இடுப்பிலோ, கையிலோ கட்டிக் கொள்வதனால் அக்குழந்தைக்கு ஏதேனும் தீராத நோய் ஏற்பட்டு முடியாமல் இருந்தால் அக்குழந்தையின் இடுப்பில் உள்ள தொப்புள் கொடியினை எடுத்து பொடியாக்கி குழந்தைக்கு தரவிருக்கக்கூடிய மருந்தில் கலந்து கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்கும் பொழுது அக்குழந்தை தீராத நோயிலிருந்தும் விடுபட்டு நலன் பெறும்.

(பொறுப்பு துறப்பு : இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை தெரிந்து கொள்வதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். Idp7News இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)