எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குட்கா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, 3 கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைத்தும், தலா ரூ.25000 அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.இருப்பினும், ஆங்காங்கே அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தவகையில் சேலம் எடப்பாடி சினிமா திரையரங்க வாசலில் 3 சிறுவர்கள் குட்கா பாக்கெட்டுகளுடன் மயங்கிய நிலையில் கிடந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், மீண்டும் எடப்பாடி நகராட்சி பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட கடைகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகளவில் நடப்பதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பந்தபட்ட கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட 10 கிலோ அளவிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 3 கடைகளுக்கு தற்காலிகமாக சீல் வைத்தும், தலா ரூ.25000 அபராதம் விதித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Readmore: மாணவிகளிடம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டால் உடனடி டிஸ்மிஸ்!. ஆசிரியர்களுக்கு கடும் எச்சரிக்கை!.