தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது.
டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல பதவிகளுடன் 6,244 காலியிடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், காலி பணியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக அதிகரிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஜூன் 9ம் தேதி எழுத்துத் தேர்வும் நடத்தப்பட்டது.
சுமார் 20 லட்சம் பேர் குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் சுமார் 15,88,000 தேர்வர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதன் பின்னர் குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. பின் மேலும் 2,208 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், குரூப் 4 தேர்வுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 8,932 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில், இன்று(அக்.,28) மதியம் 1.55 மணியளவில் குரூப் 4 தேர்வு முடிவு வெளியானது.https://www.tnpsc.gov.in/ மற்றும் https://apply.tnpscexams.in/ என்ற இணையதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.