சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசந்த் & கோ-வின் 122வது கிளையை, எம்.பி. விஜய் வசந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கடைக்கோடி கிராமம் முதல் நன்கு வளர்ந்த நகரம் வரை பரவாலாக இன்று விரவிக் கிடக்கும் வசந்த் & கோ நிறுவனம் கடந்த 45 ஆண்டுகளாக எளிய மக்களின் நம்பிக்கையை சேகரித்து வைத்துள்ளது. கடல் தாண்டி உலகம் முழுவதும் புகழை உயர்த்தி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் டீலராக வளர்ந்து நிற்கும் நிறுவனம் வசந்த் & கோ. சிறு துளி பெருவெள்ளம் என்ற கூற்றுக்கிணங்க மக்களின் மனங்களை சிறுக சிறுக நம்பிக்கையின் மூலம் இடம் பிடித்து இன்று மிகப்பெரிய ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்துள்ளது.

இந்தநிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியில் வசந்த் & கோ-வின் 122வது கிளையை, எம்.பி. விஜய் வசந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜர் மற்றும் மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு விஜய்வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை அடுத்து வசந்த் அண்ட் கோவின் 122 வது கிளையை விஜய்வசந்த் ரிப்பன் வெட்டியும்,குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜய்வசந்த், வசந்த் அண்ட் கோ-வில் மற்ற நிறுவனங்களை விட பொருட்கள் தரமாகவும்,விலை குறைவாகவும் மனதிற்கு நிறைவாக உள்ளதாக கூறினார். எடப்பாடியில் வசந்த் அண்ட் கோ நிறுவன கிளை தொடங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய அவர், இந்த வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கிய வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் நிர்வாக இயக்குனர் திரு.வினோத்குமார், சேலம் மாவட்ட வர்த்தக பிரிவு காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம், கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தநாரி, மேற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மற்றும் நகர கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Readmore: மக்களே குட்நியூஸ்!. தீபாவளிக்கு தடையில்லா மின்சாரம்!. கள அலுவலர்களுக்கு பறந்த உத்தரவு!