விமானங்களில் மதுவை எடுத்துச் செல்லவும், குடிக்கவும் அனுமதிப்பது போல், ரயில்வேயிலும் இதுபோன்ற விதி ஏதும் உள்ளதா என்ற கேள்வி ரயில்வே பயணிகளின் மனதில் அடிக்கடி எழுகிறது . இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்களைத் தெரிந்து கொள்வோம். பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ரயிலில் சில பொருட்களை எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே அனுமதிப்பதில்லை, அதில் மதுவும் அடங்கும். இந்த விதியை பயணிகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

1989 ஆம் ஆண்டின் இந்திய ரயில்வே சட்டம் அதிகபட்சமாக 2 லிட்டர் மதுபானங்களை ரயில்களில் கொண்டு செல்ல அனுமதிப்பதாக பலர் வாதிடுகின்றனர். ஆனால் உண்மையில் 2 லிட்டர் மதுபானம் கொண்டு செல்ல அனுமதி உள்ளதா? இந்திய ரயில்களில் மதுவை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மது தீப்பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ள பொருள். எனவே, ரயிலில் ஒரு சொட்டு மதுபானம்கூட கொண்டு செல்ல அனுமதி இல்லை.

ரயிலில் மது அருந்தி பயணம் செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், பயணிகளுக்கு எதிராக, ரயில்வே சட்டம் 1989, பிரிவு 165ன் கீழ், 500 ரூபாய் வரை அபராதம் மற்றும் 6 மாதங்கள் வரை சிறை தண்டனையும் அடங்கும். கூடுதலாக, பயணிகளின் டிக்கெட்டையும் ரத்து செய்யலாம். மது மட்டுமின்றி, அடுப்புகள், கேஸ் சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், அமிலங்கள், கிரீஸ் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில மெட்ரோ நகரங்களில் மட்டும்தான் சீல் வைக்கப்பட்ட 2 லிட்டர் மதுபானம் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு டெல்லி மெட்ரோவில் சீல் செய்யப்பட்ட மதுவை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Readmore: குட்நியூஸ்!. மேட்டூரில் ரூ.6000 கோடி!. மின்சார தேவையை பூர்த்தி செய்ய வருகிறது புதிய திட்டம்!.