தமிழக அரசு அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடக்கூடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அகவிலைப்படி உயர்வு ஜூலை 1, 2024ஐ அடிப்படையாகக் கொண்டு அமல்படுத்தப்படும். முன்தேதியிட்டு அகவிலைப்படி உயர்த்தப்படுவதால் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான நிலுவைத் தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பெறுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த உயர்வு 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி உள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், 1 கோடிக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
இந்தநிலையில், தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருக்கும் நல்ல செய்தி மிக விரைவில் வரவுள்ளதாகத் தெரிகிறது. அதாவது மத்திய அரசு ஊழியர்களை போல மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை அதிகரிக்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் பணியாற்றும் பணியாளர்கள் என அனைவருக்குமான டிஏ -வை 53% ஆக உயர்த்த வேண்டும் என ஒன்றியம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த அறிவிப்பு தீபாவளிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, தமிழக அரசு அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடக்கூடும் என தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Readmore: இதுமட்டும் கட்சியில் நடக்கவே கூடாது!. கோபமடைந்து பேசிய விஜய்!. சூசகமாக கூறிய புஸ்ஸி ஆனந்த்!