நெல்லி மரத்தை வீட்டில் வளர்க்க கூடாது என்று சிலர் சொல்கிறார்கள்.. ஒரே ஒரு மரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு போய் உங்கள் வீட்டில் நட்டு வைத்தால் மரத்தில் காய்கள் காய்க்காது. இந்த மரத்துடன் சேர்த்து இன்னொரு மரமும் நட்டு வைக்கும்போதுதான் அதில் காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். அதிலும், புளிப்பு தன்மையுள்ள மரங்களுக்கு அடியில் மற்ற செடிகள் முளைப்பதில்லை. அதுபோலவே பெரிய நெல்லிக்காய் மரத்திற்கு பக்கத்தில் செடிகளும் முளைக்காது என்பார்கள்.. குறிப்பாக, புளியமரம், பெரிய நெல்லிக்காய் மரம் போன்றவை அமிலத்தன்மை கொண்டுள்ளதால் தேனீக்களும், வண்டுகளும்கூட இந்த மரங்களில் வந்து அமர்வதில்லையாம். இதனால் எளிதாக மகரந்த சேர்க்கையும் நடைபெறுவதில்லை.. இதன்காரணமாக பெரிய நெல்லிக்காய் மரத்தில், காய்களும் காய்க்காமல் போய் விடுகின்றன.

இதுவே நெல்லிக்காய் மரம் தோட்டத்தில் இருந்தால், அதிக பூச்சிகள் வந்து மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெற உதவுகிறது… காய்களும் தோட்டத்தில் அதிகமாக காய்க்கிறது என்பார்கள். எனினும், நெல்லிக்காய் மரங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்தவையாக கருதப்படுகிறது. அதனால், சிறிய செடியாக வாங்கி வைத்து வீட்டில் நெல்லிக்காய் மரம் வளர்க்கலாம்.. இந்த மரம் வளர, வளர வீட்டின் செல்வமும் வளரும் என்பது நம்பிக்கையாகவும் உள்ளது… அதுமட்டுமல்ல, நெல்லி மரத்தை வளர்த்து வருவதால், வீட்டிலுள்ள துர்சக்திகளும், கண் திருஷ்டிகளும் விலகும்.. எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிலிருந்து வெளியேறும்.

இதேபோல் முருங்கை மரத்தில் இருக்கும் கிளைகள் மிகவும் இளகிய கிளைகளாக இருப்பதால் எளிதில் முறிந்து விடும். அது யார் மீதாவது விழுந்து விடும் என்பதால் தான் அதனை வீட்டில் முன்னால் வளர்க்க கூடாது என்று கூறுவார்கள். வீட்டிற்கு பின்னால் தாராளமாக வைத்து வளர்க்கலாம். எந்த இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்? எந்த இடத்தில் வைத்து வளர்க்க கூடாது என்கிற சூட்சமங்கள் மட்டுமே மரம் வளர்ப்பில் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.