Google Chrome-ல் உள்ள சில தொழில்நுட்ப தவறுகளை பயன்படுத்தி, ஹேக்கர்கள் கணினியை அணுகலாம் என்றும் இது உங்கள் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் எனவும் CERT-In எச்சரித்துள்ளது.

ஸ்மார்ட்போன் (Smartphone), லேப்டாப் (Laptop) மற்றும் கணினி (Computers) உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் கூகுள் குரோம் பயன்படுத்தும் போது சில ஆபத்துகளை பரவலாக சந்திக்க நேரிடும். அதாவது, ஹேக்கர்கள் இந்த குறைபாட்டைப் பயன்படுத்தி கூகுள் குரோம் அணுகும் தகவல் மட்டுமின்றி, சாதனங்களில் இருக்கும் பல்வேறு ஆப்ஸ்களில் இருக்கும் தகவல்களையும் திருட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விண்டோஸ், மாக்சோஸ் மற்றும் லினக்ஸ் தளங்களில் உள்ள பயனர்களுக்கு இந்த பாதிப்பு குறிப்பாக கவலைக்குரியது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன் பொருள் உலகளவில், ஆண்ட்ராய்டு, iOS மற்றும் தனிப்பட்ட கணினிகள் போன்ற அனைத்து வகையான சாதனங்களிலும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பயனர்கள் சாத்தியமான ஆபத்துகளுக்கு ஆளாகிறார்கள்.

ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், உடனே கூகிள் பிளே ஸ்டோர் (Google Play Store) அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) சென்று, கூகிள் குரோமை அப்டேட் செய்ய அறிவுரைக்கப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பிறகு, கூகுள் குரோம் ஆப்ஸை மீண்டும் ஒரு முறை கிளோஸ் செய்து ஓபன் செய்து பயன்படுத்த அறிவுரைக்கப்பட்டுள்ளது.

பிசி பயனர்கள் கூகிள் குரோமைத் தொடங்கி, மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து “Settings” என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, “About Chrome” என்பதற்குச் சென்று அப்டேட்களைச் சரிபார்த்து, கிடைக்கக்கூடிய புதிய அப்டேட்டை இன்ஸ்டால் செய்து, பிறகு கூகுள் குரோமை க்ளோஸ் செய்து, மீண்டும் திறக்கவும். புதிய Google Chrome Update மூலம் இந்த ஆபத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Readmore: சேலத்தில் லாரி மோதி விபத்து!. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு நேர்ந்த சோகம்!. சாலையை கடக்க முயன்றபோது விபரீதம்!