தமிழக அரசு சார்பாக மகளிர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை முதல் மகளிர் சொந்த தொழில் செய்வதற்காகவே பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் சுய தொழில் செய்வதற்காக 2.22 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களை தொழில்நுட்ப, பொருளாதார மற்றும் சமுதாய ரீதியாக வலுப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சுய உதவிக் குழுவினருக்கு பல்வேறு நவீன தொழில்களில் பயிற்சி அளித்து, அத்தொழிலை துவங்குவதற்குத் தேவையான நிதி உதவியினையும் வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக. சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தேனீ வளர்ப்பினை மேற்கொள்வதற்குத் தேவையான பயிற்சி, தொழில்நுட்ப உதவி. உட்கட்டமைப்பு மற்றும் நிதி உதவியினை வழங்கி வருகிறது.

இருப்பினும், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் தேனீ வளர்ப்பு வெற்றிகரமான தொழிலாக மாறி வருகிறது தேனீ பண்ணை அமைக்க தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கு, தேனீ வளர்ப்போர்க்கும் ஏற்றதாக அமைத்தல் அவசியம். தேனீ கூட்டங்கள் எங்கெங்கு இயற்கையில் அதிகமாக காணப்படுகிறதோ, அந்த இடங்களில் பொதுவாக தேனீக்கள் வளர்ப்பதற்கு ஏற்றவை. தேனீக்களை வளர்க்க விவசாயம் நிலம் தேவையில்லை. தேனீக்களை வளர்க்க உகந்த பருவநிலை நிலவும் இடங்களை தெரிவு செய்ய வேண்டும். இப்படி பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினால் தேனீ வளர்ப்பில் வெற்றிக் கொடி நாட்டலாம் என்கின்றனர் துறைசார்ந்த வல்லுநர்கள்.

இந்தநிலையில், வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்களுக்கு தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி மதுரை வேளாண் கல்லுாரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அளிக்கப்படுகிறது. டிச. 2 முதல் 7 வரை அளிக்கப்படும் பயிற்சிக்கு குறைந்தது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். முன்பதிவுக்கு : 99652 88760 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறியலாம். பயிற்சிக்கு குறைந்தது ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 40 வயதுக்குட்பட்டவர்கள் பங்கேற்கலாம். மதுரை மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் மட்டும்.

தேசிய தேனீ வாரியம் நிதியுதவியின் கீழ் தேனீ வகைகள், வளர்ப்பு, பூச்சி, நோய் மேலாண்மை, பயிர்களின் உற்பத்தியில் தேனீக்களின் முக்கியத்துவம், தேன் சந்தை வாய்ப்பு, தேனில் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரித்தல், ஏற்றுமதி சந்தை வாய்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

Readmore: வார்னிங்!. அறிவிப்பு வந்துடுச்சு!. வங்கக்கடலில் உருவாகிறது ஃபெங்கல் புயல்?. சென்னைதான் டார்கெட்!