ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு குறைந்துள்ளதால், அரிசிக்கு பதிலாக மக்கள் கோதுமையை இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. ரேஷன் கார்டுகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களும் மக்களை சென்றடைகிறது. தமிழகத்திற்கு மத்திய அரசு 18000 டான் கோதுமை ஒதுக்கி வந்த நிலையில் தொடர்ந்து தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது வழங்கப்படும் கோதுமையின் அளவை உயர்த்தியுள்ளது.

அதன்படி 8,500 டன்னில் இருந்து 15 ஆயிரம் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரேஷன் கடைகளில் தற்போது கோதுமை தட்டுப்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கோதுமையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதாவது அரிசிக்கு பதிலாக மக்கள் கோதுமையை இலவசமாக பெறலாம். மேலும் சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் 5 கிலோ கோதுமையும் பிற பகுதிகளில் 2 கிலோ கோதுமையும் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்