ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆகவே தொடரும் என்றும் பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரெப்போ வட்டி விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம். ரெப்போ வட்டி விகிதம் உயர்ந்தால் அதனைத் தொடர்ந்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்தும். இந்நிலையில், தொடர்ந்து 11வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.
இன்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கியின் இயக்குநர் சக்திகாந்த தாஸ், “வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகித்தில் மாற்றமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதம் ஆகவே தொடரும். பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் வட்டி மாற்றமில்லை” என்றார்.
Readmore: நகை பிரியர்களே ஹேப்பி நியூஸ்!. தங்கம் விலை இன்று குறைவு!. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?