தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டுக்காக பலர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மகளர் உரிமைத்தொகை பெறுவதற்கு முக்கிய ஆவணமாக இருக்கு இதற்காக விண்ணப்பித்து, நீண்ட காலமாக காத்திருப்பில் இருக்கின்றனர் மக்கள். நாடளுமன்ற தேர்தல் காரணமாக புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 ஸ்மார்ட் கார்டுகள் உள்ளன. அத்துடன் முழு நேர நியாய விலை கடைகளாக 26 ஆயிரத்து 502 செயல்பட்டு வருகிறது.பகுதிநேர கடைகள் 10 ஆயிரத்து 452 உள்ளன. மொத்தமாக தமிழ்நாட்டில் 36 ஆயிரத்து 954 ரேஷன் கடைகள் உள்ளன.

இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து பல லட்சம் பேர் காத்திருப்பில் இருக்கின்றனர். சுமார் 2.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விரைவில் புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி துவங்கயிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்தநிலையில், முதல் கட்டமாக 92 ஆயிரம் விண்ணப்பதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதனையடுத்து 80ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு, மீதமுள்ளவர்களுக்கு தொடர்ந்து ஸ்மார்ட் கார்டு வினியோகிக்கும் பணி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நிராகரிக்கப்பட்ட ரேஷன் அட்டைத்தாரர்கள் உணவு பொருட்கள் வழங்கல் துறையிடம் மேல்முறையீடு செய்து விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக மீண்டும் பரிசீலனை செய்யப்பட்டு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும். இதனிடையில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் அடுத்த மாதம் முதல் உணவு பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!. மேள தாளம் முழங்க பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள்!.