விளையாட்டு வீரர்களுக்கான 3% இடஒதுக்கீடு அடிப்படையில், முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படஉள்ளது என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 707 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் 3,583 பயனாளிகளுக்கு ரூ.33.26 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது பேசிய உதயநிதி, தமிழகத்தில் 12,525 ஊராட்சிகளுக்கு ரூ.86 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன. இதுவரை 26 மாவட்டங்களில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பன், துளசிமதி ஆகியோருக்குப் பாராட்டுகள். இவர்களைப்போல இன்னும்நிறைய வீரர்களை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன், முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறோம். இந்தப் போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சம் பேர் கலந்துகொண்ட நிலையில், நடப்பாண்டு 11 லட்சம் பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் 3,350 வீரர்களுக்கு ரூ.110 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில், முதல்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படஉள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.96 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படுள்ளது. சேலம் விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ரூ.7 கோடியில் 60 வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் வகையிலான விளையாட்டு விடுதி சேலத்தில் அமைக்கப்படும் என்று கூறினார்.
Readmore: பெண்களே குட்நியூஸ்!. இனி இந்த அரசு பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்..!! தமிழக அரசு அறிவிப்பு!