சென்னை கலைவாணர் அரங்கத்தில் 71ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் வேர்கள், விழுதுகள் மற்றும் சிறகுகள் திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மற்றும் பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையின் சிறு பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றை திறந்து வைத்து 2,703 பயனாளிகளுக்கு 33.67 கோடி ரூபாய்க்கான கடனுதவி காசோலைகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் மாதா, மாதம் 1000 ரூபாய் பெறுகின்ற இந்த திட்டத்தில், கூட்டுறவுத் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால், கூட்டுறவு வங்கிகளின் வாயிலாக 8 லட்சத்து 29 ஆயிரம் மகளிருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்ல, மகளிர் உரிமைத்தொகையை Recurring Deposit ஆக செலுத்தி, அதன் மூலம் மகளிர் வட்டியைப்பெற்று குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பெரிய அளவிலான தொகையாக பெறுவதற்கான ‘தமிழ்மகள்’ எனும் திட்டத்தையும் கூட்டுறவுத்துறை செயல்படுத்தி வருகின்றது. மேலும் சிறுசேமிப்பை ஓர் இயக்கமாகவே கூட்டுறவுத்துறை மாற்றியிருக்கின்றது.

கிராமப்புறங்களில் ஒரு கூட்டுறவு சொசைட்டி வந்து விட்டால், அது 10 Nationalised Bank கிளைகள் வந்ததற்கு சமம் என்று சொல்வார்கள். அந்த அளவுக்கு கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை உள்ளது என்று குறிப்பிட்டார்.

Readmore: சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு இந்த பிரச்சனையும் வருமாம்..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!