தமிழ்நாடு அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி – கல்லூரிகள் என்று 4 நாட்கள் மீண்டும் தொடர் விடுமுறை வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, அலுவலகங்களில் பணியாற்றுவோரும் தொடர் விடுமுறை நாள் என்றால், கொஞ்சம் ரிலாக்ஸாக வேலை செய்யலாம் என்ற வகையில் விடுமுறை நாளை முன்கூட்டியே திட்டமிட்டு விடுகின்றனர். அவர்களை குஷிப்படுத்தும் வகையில், தமிழ்நாடு முழுவதும் இந்த வாரம் தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.

அந்த வகையில், மார்ச் 29ஆம் தேதி சனிக்கிழமை, மார்ச் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 31ஆம் தேதி திங்கள் (ரம்ஜான் பண்டிகை) என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. அதேபோல், ஏப்ரல் 1ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை வங்கிக் கணக்கு முடிவுக்கான வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு பிறகு மீண்டும் தொடர் விடுமுறை வருவது பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்ஜான் விடுமுறை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

Read More : குளிர்பானத்தில் மது..!! போதையில் தள்ளாடிய இளம்பெண்..!! ஆபாச வீடியோ எடுத்து அடிக்கடி வன்கொடுமை..!! அதிர்ச்சியடைந்த 16 வயது மகன்..!!