மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமரின் வித்யாலஷ்மி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது மாணவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை கடன் வழங்கும் பிரதமரின் வித்யாலஷ்மி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் திறமைவாய்ந்த மாணவர்கள் தரமான உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதற்காக நிதியுதவியை வழங்கும். இந்த திட்டத்தின் மூலமாக கல்வி கட்டணம் மற்றும் கல்வி தொடர்பான பிற செலவுகளின் முழு தொகையையும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் இருந்து பிணையில்லாமல் கல்வி கடனாக பெற முடியும்.
தேசிய நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் முதல் 100 இடங்களில் இருக்கும் அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் 860 தகுதிவாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலுவதற்கு இந்த திட்டம் பொருந்தும். இதன் மூலமாக சுமார் 22லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விரும்பினால் பிரதமர் வித்யாலஷ்மி திட்டத்தின் பலன்களை பெற முடியும்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ். நாட்டில் எந்தவொரு இளைஞரும் தரமான உயர்கல்வியை தொடர்வதை நிதிபிரச்னைகள் தடுக்கக்கூடாது என்பதற்கான திறமையான மாணவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கான பிரதமரின் வித்யாலஷ்மி திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது” என்றார்.
Readmore: அதிமுக கூட்டணி உறுதி!. தவெக கட்சிக்கு எத்தனை இடங்கள்?. அப்டேட் கொடுத்த எடப்பாடி பழனிசாமி!