ஜனவரி 10-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir Urimai Thogai) கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது. தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசால் சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் குடும்பங்களுக்கு செலவுகள் அதிகமாகியுள்ளது. இதனால், அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும் வகையில், குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கிற்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கப்படும் என 2023-24 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. தகுதிவாய்ந்த மகளிருக்கு மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டது. தற்போது அரசின் விதிமுறைகள் பொருந்தாததால் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பயனாளர்கள் நீக்கப்பட்டு, தற்போது மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 1 கோடியே 14 லட்சமாக குறைந்தது.

தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் நிலையில் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை பணம் வரவு வைக்கப்படும். அந்த வகையில் இந்த மாதமும் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில் பொங்கல் பண்டிகை வருவதால் அதற்கு முன்னதாகவே பணம் வங்கி கணக்கில் வந்து விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஜனவரி 10-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தற்போது புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பு 1000 ரூபாய் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Readmore: ஒரே வீட்டில் 2 மனைவிகள்..!! நள்ளிரவில் அந்த விஷயத்துக்காக வெடித்த சண்டை..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!