தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது,
தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொது மக்கள் அனைவரும் பட்டாசு வாங்குவது, புத்தாடைகள் எடுப்பது என தற்போதே ஆயத்தமாகி வருகின்றனர். இந்தநிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை நிறுவனங்களில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சூப்பர் வைசர், சேல்ஸ்மேன், உதவி சேல்ஸ்மேன் என்ற வகையில் டாஸ்மாக் ஊழியர்கள் சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக வகைப்படுத்தப்பட்டு, இதில், சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 20 சதவிகிதம் வரை போனஸ் வழங்க அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதன்மூலம் டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 16,800 ரூபாய் வரை போனஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Readmore: கொங்கணாபுரத்தில் பட்டப்பகலில் கைவரிசை!. நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது!