நாடு முழுவதும் கடந்த நிதி ஆண்டுக்கான வட்டி தொகை ஊழியர்களின் பிஃஎப் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி கட்டாயமாக கழிக்கப்பட்டு இந்த EPF-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. பணியாளர்களும் உரிமையாளர்களும் குறிப்பிட்ட தொகையை இங்கு டெபாசிட் செய்கிறார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்த நிதியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர சட்டம், 1952 இன் கீழ் நிர்வகிக்கிறது. இது கவர்ச்சிகரமான வருவாய் விகிதங்களை வழங்குகிறது, இது வங்கிகளில் வழங்கப்படும் விகிதங்களை விட அதிகமாக உள்ளது.
EPF எனப்படும் வருங்கால வைப்பு நிதி என்பது ஒவ்வொரு மாதமும், ஊழியர்கள் மற்றும் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் ஊழியரின் ஈபிஎஃப் கணக்கில் தனித்தனியாக ஊழியரின் அகவிலைப்படி மற்றும் அடிப்படை சம்பளத்தில் 12% தொகை செலுத்தப்படும். இது ஊழியர்கள் ஓய்வு பெரும்போது சேமிப்பாக கிடைக்கும்.
ஏதேனும் பண அவசர சூழலில், பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பும் தங்கள் EPF பணத்தின் குறிப்பிட்ட அளவை பெற்றுக்கொள்ள முடியும். பிஎஃப் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கான வட்டித் தொகையை அரசு செலுத்துகிறது. இது ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது பி.எஃப் வட்டி விகிதம் 8.25% ஆக உள்ளது. இதன் மூலம் ஊழியர்கள் பெரிய அளவில் பயனடைகின்றனர். பண நெருக்கடி இருக்கும் இந்தக் காலத்தில் பிஎஃப் வட்டித் தொகை பயனாளிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
இந்நிலையில், EPFO அமைப்பின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு கடந்த நிதியாண்டிற்கான வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 – மார்ச் 2024 வரையிலான காலகட்டத்துக்கான வட்டி தற்போது வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7 கோடி பிஎஃப் ஊழியர்கள் பயனடைகின்றனர்.
பி.எஃப் பேலன்ஸ் பார்ப்பது எப்படி?: உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 99660 44425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், உங்கள் பேலன்ஸ் பற்றி தெரிவிக்கப்படும். எஸ்எம்எஸ் மூலம் EPFO பேலன்ஸை சரிபார்க்க, பயனர்கள் ‘EPFOHO UAN ENG’ என டைப் செய்து, உறுப்பினர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 77382 99899 க்கு அனுப்ப வேண்டும். உங்கள் மொபைல் எண் PF கணக்குடன் இணைக்கப்படவில்லை என்றால் நீங்கள் ஏதேனும் பிஎஃப் கிளைக்குச் சென்று விசாரிக்க வேண்டும்.
போன் ஆப் மூலம் பார்க்க: பிஎஃப் பணத்தை சரிபார்க்க இதுமட்டும் அல்லாமல் பல வழிகள் உள்ளன. UMANG ஆப் மூலம் நீங்கள் உங்கள் பி.எஃப் பேலன்ஸையும், வட்டி எவ்வளவு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பதையும். பார்க்கலாம். UMANG ஆப்பில், EPFO என்பதை தேர்வு செய்து உள்ளே உழைந்தால் View Passbook என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, UAN நம்பர் கொடுத்தால் உங்கள் நிறுவனத்தின் பெயர் காட்டப்படும். அதை க்ளிக் செய்தால் உங்கள் பிஃப் கணக்கின் பாஸ்புக் காட்டப்படும். அதனை முழுமையாக டவுன்லோடு செய்தும் பார்த்துக்கொள்ளலாம்.
இணையதளத்தில் எளிதாக பார்க்க: அதேபோல, இபிஎஃப்ஓ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பார்க்கலாம். EPFO இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in க்கு செல்லவும். முகப்புப் பக்கத்தில், Services என்பதைக் கிளிக் செய்து, அதன் கீழ் ‘For Employees’ என்பதைக் கிளிக் செய்யவும். திறக்கும் புதிய பக்கத்தில் ‘சேவைகள்’ என்பதன் கீழ் ‘Member Passbook’ என்பதைக் கிளிக் செய்யவும்.
அதன் பிறகு ஒரு லாகின் பக்கம் தோன்றும். அதில் UAN, பாஸ்வேர்டு மற்றும் Captcha-வை உள்ளிட்டு உங்கள் கணக்கில் உள்நுழையவும். இப்போது நீங்கள் உங்கள் பாஸ்புக் மற்றும் தொகையை சரிபார்க்கலாம். 31/03/2024 தேதியிட்டு பி.எஃப் வட்டி வரவு வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடியும்.
Readmore: விஷமாக மாறும் சிக்கன் ரைஸ்!. 3 மணிநேரத்தில்!. வார்னிங் கொடுக்கும் மருத்துவர்கள்!