பொங்கல் விடுமுறையுடன் சேர்த்து வரும் ஜன. 17-ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025ம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15-ம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16-ம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசானது ஜனவரி 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 16-ம் தேதி (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் அரசு விடுமுறையை அறிவித்துள்ளது. அதேநேரம் அந்த வாரத்தில் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் வேலை நாளாகவும் அதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு அரசு விடுமுறை என்பதாலும், சொந்த ஊர் செல்பவர்கள் வெள்ளிக்கிழமை (ஜனவரி 17) விடுமுறை வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

வரும் 18 மற்றும் 19-ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களும் சனி, ஞாயிற்றுக்கிழமையாகும். ஜன. 17-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்தால், தொடர்ந்து விடுமுறைகள் கிடைக்கும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே, ஜன. 17-ஆம் தேதியை விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று அரசு அலுவலர் ஒன்றியம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது பொங்கல் முந்தைய நாளான ஜனவரி 13ம் தேதி போகி பண்டிகை வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் போகி பண்டிகை்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. அந்த வகையில் அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Readmore: ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் PF தொகை எங்கு முதலீடு செய்யப்படுகிறது தெரியுமா..? மத்திய அரசு விளக்கம்..!!