அட்சய திருதியை நாளான இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.71,840-க்கு விற்பனையாகும் நிலையில், கடந்த சில ஆண்டுகளில் அட்சய திருதியை அன்று தங்கம் விலை எவ்வளவு விற்பனையானது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அட்சய திருதியை நாளான இன்று தங்க நகைகள் வாங்குவதற்காகப் பொதுமக்கள் ஆர்வத்துடன் நகைக் கடைகளில் குவிந்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இன்று அதிகாலை 5 மணிக்கே பெரும்பாலான நகைக் கடைகள் திறக்கப்பட்டன. இன்று அட்சய திருதியை என்பதால், தங்கம் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையானது.

மேலும், அட்சய திருதியை முன்னிட்டு, வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக நகைக் கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகள் சவரனுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி அறிவித்துள்ளன. பல கடைகளில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு செய்கூலி, சேதாரத்தில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 7,240 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 57,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2023இல் ஒரு கிராம் தங்கம் 6,059 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 48,472 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2022இல் அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 5,195 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 41,560 ரூபாய்க்கும் விற்பனையானது.

கடந்த 2021இல் ஒரு கிராம் தங்கம் 4,866 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38,928 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அட்சய திருதியை தினத்தன்று ஒரு கிராம் தங்கம் 4,717 ரூபாய்க்கும் ஒரு சவரன் 37,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : பரோலில் வந்த ஆயுள் தண்டனை கைதி..!! லாட்ஜில் வைத்து மனைவியின் கதையை முடித்த கணவன்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!