சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகையன்று ரூ.59,640 என்ற உச்சத்தை தொட்ட தங்கம் விலை, அடுத்தடுத்த நாட்களில் சரிந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையானது.

அந்த வகையில், நேற்றைய தினம் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து ரூ.7,200-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.57,600க்கு விற்பனையானது. இந்நிலையில், இல்லத்தரசிகளுக்கு மேலும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக தங்கத்தின் மீதான விலை 2-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 சரிந்து ரூ.56,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.7080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சென்னையில் தங்கம் விலை இரண்டு நாட்களில் ரூ.1,760 குறைந்துள்ளது. வெள்ளியின் விலை கடந்த இரு வாரமாக எந்த மாற்றமுமின்றி காணப்பட்ட நிலையில், இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 குறைந்து ரூ.98க்கும் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 குறைந்து ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read More : கண்களில் நீர்வடிதல், சிவந்து காணப்படுகிறதா?. வேகமெடுத்த ‘ப்ளூ வைரஸ்’ காய்ச்சல்!. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை