அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சென்னையில் நேற்று (அக்.22ஆம் தேதி) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.7,300க்கும், சவரன் ரூ.58,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.இந்நிலையில் இன்று (அக்.23ஆம் தேதி) ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,340க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.48,440க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,055க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.112க்கும், ஒரு கிலோ ரூ.1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Readmore: இனி ரொம்ப சிரமம்!. நவ.1 முதல் டிஜிட்டல் பேமெண்ட்டுகளில் அதிரடி மாற்றம்!. புது ரூல்களை இறக்கிய RBI!.