இந்தியாவின் பிரபலமான ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகளாக Gpay மற்றும் போன் பே ஆகியவை உள்ளன. அனைவருக்கும் பரிட்சயமான கட்டண செயலிகளாக இருக்கும் இவை ஒட்டுமொத்த UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளில் 85 சதவீத பங்குகளை வைத்துள்ளன. இந்த செயலிகளில் கூகுள் பே தனது வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கி வருகிறது.
கூகுள் பே செயலி மூலமாக தங்கத்தை வைத்து ரூ. 50 லட்சம் வரை கடனாகப் பெறலாம். இந்தியாவில் அதிகப்படியான மக்கள் தங்கத்தை வைத்து கடன் பெறுகின்றனர். தனிநபர் கடன் பெறுவதற்கு பெரும்பாலும் தங்கத்தையே அடமான பொருளாக பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். மிடில் கிளாஸை சேர்ந்த பலரும் தங்கத்தை வைத்து கடன் பெறுவது நடக்கிறது.
இந்நிலையில் கூகுள் பே மூலமாக தங்க கடன் பெறும் வசதி அண்மையில் கொண்டு வரப்பட்டது. முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மூலமாக இதனை கொண்டு வந்தது கூகுள் நிறுவனம். வாடிக்கையாளர்கள் முத்தூட் ஃபைனான்ஸ் வாயிலாக தங்க நகைக் கடன்களை கூகுள் பே பயன்படுத்தும் பயனாளர்கள் பெற முடியும். இதற்காக அண்மையில் முத்தூட், கூகுள் பே நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது.
இதனால் தங்க நகைக் கடன் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை. எளிமையாக கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதே போல் கூகுள் பே மூலமாக தனி நபர் கடன் பெறும் வசதியும் உள்ளது. ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 9 லட்சம் வரை கடன் பெற முடியும். இதன் மூலமாக பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் கூகுள் பே கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கடன் தொகையை பெற வாடிக்கையாளர் முதலில் தனது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில், கடன் (get loan) அல்லது கிரெடிட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து பெயர், முகவரி, வருமானம் போன்ற அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதனையடுத்து தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கடனை பெறலாம். குறிப்பாக மொபைல் ஆப் மூலமாக கடன் பெறும் போது பொதுமக்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.